ஒரு கணவன் மனைவியிடம் சண்டை போட்டு கொண்டு இருக்கும்போது அவர் கோபத்தில் “தலாக், தலாக், தலாக்”என்று மூன்று முறை ஒரே நேரத்தில் சொல்லி விட்டால்

 


ஒரு கணவன் மனைவியிடம் சண்டை போட்டு கொண்டு இருக்கும்போது அவர் கோபத்தில் “தலாக், தலாக், தலாக்”என்று மூன்று முறை ஒரே நேரத்தில் சொல்லி விட்டால் அது மூன்று தலாக்காக ஆகிவிடுமா?

இல்லை அது முதல் தலாக்தான் ஆகுமா?


தலாக் சொல்வதின் சட்டம் என்ன?


🍂பதில்🍂


       கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்சினைகள் வருவது சாதாரணமானதுதான். அது உடனுக்குடன் சரியாகிவிடும்.

அதுபோலல்லாமல் பிரச்சனைகள் தீர்க்க முடியாத முற்றிய  நிலைமைக்கு போய் அது தொடந்து கொண்டேயிருந்து வாழ  முடியாத சூழ்நிலை வரும்போது இஸ்லாம் நமக்கு காட்டிதந்த வழிதான் “தலாக்” எனும் விவாகரத்து.


இந்த தலாக்கினால் கணவன், மனைவி மட்டுமல்லாமல் குழந்தைகள், பெற்றோர்கள் என மொத்த குடும்பமே பாதிப்புள்ளாகுவதால்,

இஸ்லாம் நான்கு படித்தரங்களை வைத்துள்ளது.


தலாக் கூறுவதற்கு முன்


கணவன் மனைவிக்கு அறிவுரை கூறியோ, அல்லது கணவன் மீது தவறிருக்குமாயின் மனைவி கணவனுக்கு அறிவுரை கூறியோ அவர்களுக்குள்ளாகவே பிரச்சனைகளை தீர்க்க முயல வேண்டும்.


அடுத்து கணவன் மனைவியை இலேசான தண்டனைகள் கொடுத்து பிரச்சனைகளை தீர்க்க முயலலாம்.


கணவன் மனைவியை படுக்கையிலிருந்து தள்ளி வைக்கலாம்.


இது எதுவுமே சரிவராத பட்சத்தில் இருவீட்டாரிடமிருந்து நடுவர்கள் வந்து பிரச்சனைகளை பேசி தீர்த்துவைக்க வேண்டும்.


மேற்கூறிய நான்கு விஷயங்களை கையாண்டும் வாழமுடியாது என யாரேனும் ஒருவர் முடிவெடுத்தாலும் தலாக் கூறிவிட இஸ்லாம் அனுமதித்துள்ளது.


_இரண்டு சாட்சிகளை வைத்து “தலாக்” உன்னோடு வாழ விரும்பவில்லை, என்று கூறினால் முதல் தலாக் நிறைவடைகிறது_


_அதற்கு பின் மூன்று மாதவிடாய் காலம் கழிந்து மீண்டும் மேற்கூறியது போல் இரண்டாம் தலாக் கூறவேண்டும்._


முதல் தலாக் அல்லது இரண்டாம் தலாக் கூறுனாலும் இருவரும் மீண்டும் இணைந்து வாழ முடிவெடுத்தால் தாராளமாக மீண்டும் இணைந்து வாழலாம்.


கணவன், மனைவி பிரச்சனைகள் பிரிந்திருக்கும் சமயத்தில் ஒன்றுமில்லாதது போல் இருக்கும் என்பதாலும், இதன் பாதிப்பை ஒருவருக்கொருவர் பிரிந்திருக்கும்போது அறியக்கூடும் என்பதாலும் இஸ்லாம் இப்படி அழகான ஒரு சலுகையை அளித்துள்ளது.


_இரண்டு முறை தலாக் கூறிய பின்னரும் வாழ விருப்பமில்லை எனில் மூன்றாம் தலாக் கூறி நிரந்தரமாக பிரிந்து விட வேண்டும்._


இதற்கு பிறகு சேர்ந்து வாழ முடியாது.

ஒருவேளை மீண்டும் இணைந்து வாழ விரும்பினால் அந்த பெண் இன்னொரு திருமணம் செய்து, அந்த கணவனை விவாகரத்து செய்ய வேண்டும்.

விவாகரத்து ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் இதே சட்டம்தான் ஆனால் அவர்களுக்கு மஹர் தொகை ஆண்கள் அளிப்பதால் அதை இஸ்லாம் சட்ட அடிப்படையில் திருப்பி செலுத்த வேண்டும்.

இதுதான் தலாக்கின் சட்டம்.


அதை விடுத்து *ஒரே தடவையில் தலாக்,தலாக், தலாக், என மூன்று முறை ஏன்? முன்னூறு முறை கூறினாலும் அது முதல் தலாக் தான்*


*அதேபோல் கோபத்தில் போதிய சாட்சிகள் இல்லாமல் தலாக் கூறினால் அது தலாக் ஆகாது*


*போதிய சாட்சிகளுடன் வாழவிரும்பவில்லை என்று கூறினால்தான் அது “தலாக்”ஆகும்*


📚📖 ஆதாரங்கள்:


📙நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.


நூல்: முஸ்லிம் 2932, 2933, 2934


2:229. (இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் – பின் (தவணைக்குள் முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;; அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர, நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது – இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை; இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்; ஆகையால் அவற்றை மீறாதீர்கள்; எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.


📙நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி) என்பவரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறை கூறமாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறுசெய்வதை நான் வெறுக்கிறேன்” என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்றார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி சரி என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் “தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு” என்றார்கள்.


நூல் : புகாரி 5273, 5275, 5277


Comments